63. அருள்மிகு விளக்கொளி பெருமாள் கோயில்
மூலவர் தீபப்பிரகாசர், விளக்கொளி பெருமாள்
தாயார் மரகதவல்லி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம்
விமானம் ஸ்ரீகர விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருத்தண்கா, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'தூப்புல் பெருமாள் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜம் பெருமாள் கோயிலில் இருந்து இடதுபுறம் செல்லும் தெருவில் அரை கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். ரங்கசாமி குளம் என்னும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது.
தலச்சிறப்பு

Tiruthanka Gopuram Tiruthanka Moolavarகுளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த இடமாக இருந்ததால் இத்தலம் 'திருத்தண்கா' என்ற பெயர் பெற்றது. தண்-குளிர்ச்சி, கா-சோலை. ஒருசமயம் பிரம்மா யாகம் ஒன்றை செய்தபோது, அசுரர்கள் யாகத்தைக் கெடுக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினர். அவ்போது பெருமாள் பேரொளியாகத் தோன்றி இருட்டைப் போக்கியதால் 'தீபப்பிரகாசர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் விளக்கொளிப் பெருமாள், தீபப்பிரகாசர் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு மரகதவல்லி என்னும் திருநாமம். சரஸ்வதிக்கு பகவான் பிரத்யக்ஷம்.

Thooppul Desikan Tiruthanka Utsavarதூப்புல் வேதாந்த தேசிகனின் அவதார ஸ்தலம். கோயிலுக்கு வெளியே தெற்கு நோக்கி ஸ்வாமி தேசிகன் சன்னதியும், அவரது திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலக்ஷ்மி ஹயக்கிரீவரும் எழுந்தருளியிருக்கின்றனர்.

திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com